இளநீரில் இருக்கும் இந்த இனிப்பான சதைப்பகுதியை வீணாக்காமல் சாப்பிடவேண்டும் ஏன் தெரியுமா ?


எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் நாம் குடிக்கலாம் என சொல்லக்கூடிய ஒரு இயற்கை பானம் இளநீர். மிக அருமையான ருசியோடு, எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகளோடு நம் உடலுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திர பானம் இது. குடித்தால் குடித்துக் கொண்டே இருக்கலாம் அப்படிப்பட்ட ஒரு அற்புதமான சுவை கொண்டது.

உடலில் நீர்ச்சத்தை மிக வேகமாக அதிகரிக்க கூடிய இயற்கை பானம். சோர்வாக இருப்பவர்களுக்கு ஒரு இளநீர் கொடுத்தால் போதும் அவர்களுடைய சோர்வு எல்லாம் ஓடி உற்சாகமாக ஐந்தே நிமிடத்தில் மாறிவிடுவார்கள். இப்படி எக்கச்சக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம். கோடை வெயிலில் சுற்றி அலைபவர்களுக்கு தாகத்தை தணித்து சோர்வை குறைத்து மீண்டும் உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான இயற்கை பானம்.

கடைகளில் நாம் வாங்கிக் குடிக்கக்கூடிய இந்த இளநீரில் இருக்கக்கூடிய சதைப் பகுதியான தேங்காயை நம்மில் பலரும் சாப்பிடுவதில்லை. ருசி மிகுந்த இந்த சதைப்பகுதியில் இருக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் தெரிந்து கொண்டால் இனியும் இதை நீங்கள் வீணாக்க மாட்டீர்கள். அந்த அளவிற்கு எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது இளநீரில் இருக்கக்கூடிய சதைப்பகுதி.

இளநீரில் இருக்கும் இந்த இனிப்பான சதைப்பகுதியை வீணாக்காமல் சாப்பிடவேண்டும் ஏன் தெரியுமா ?



பலரும் இதை கொழுப்புச்சத்து அதிகம் இருப்பதாக நினைத்து சாப்பிட மாட்டார்கள். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இதை எப்பொழுதும் சாப்பிட விரும்பவே மாட்டார்கள். ஆனால் இந்த மென்மையான வெள்ளை சதை பகுதி தேங்காய் எண்ணெய், தேங்காய் தண்ணீர், இளநீர், தேங்காய் பால் இது போல மிக முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அப்படி என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் இளநீர் சதைப் பகுதியில் உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது இளநீர் சதைப்பகுதி. இதில் இருக்கக்கூடிய பெரும்பாலான பகுதி கொழுப்பாக இருந்தாலும் இவை அனைத்தும் நல்ல நிறைவுற்ற கொழுப்பு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது உங்கள் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. இளநீர் இருக்கக்கூடிய மிருதுவான சதைப்பகுதியை நீங்கள் கொஞ்சமாக சாப்பிட்டு வரும் பொழுது உங்களுடைய உடலில் கொழுப்பை அதிகரிப்பதற்கு பதிலாக உடல் எடையை குறைக்க உதவும். ஏனென்றால் இதில் இருக்கக்கூடிய சக்தி நிரம்பிய கொழுப்பு உங்களுடைய உடலை நீண்ட நேரம் ஆற்றலோடு வைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் நீங்கள் தேவையில்லாமல் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். இதில் இருக்கக்கூடிய அதிக அளவிலான புரதமும் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது. இளநீரில் இருக்கக்கூடிய மென்மையான சதை பகுதி நார் சத்து நிறைந்ததாக உள்ளது. இது செரிமானத்தை மிகவேகமாக தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் செரிமானம் நடைபெறக்கூடிய உடல் உறுப்புகள் மற்றும் குடல் பகுதியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இளநீரில் மிருதுவான சதைப் பகுதியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் MCTs எனப்படும் நடுத்தர இணைப்பு ட்ரைகிளிசரைடுகள். இது நம்முடைய உடலில் மிக வேகமாக ஆற்றலாக மாற்றப்படுகிறது.

இளநீரில் இருக்கக்கூடிய மிருதுவான சதைப்பகுதி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. இதில் அதிக அளவிலான ஆக்சிஜனேற்ற மதிப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை மிக வேகமாக அதிகரிக்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இது மிக வேகமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஆகையால் இப்படிப்பட்ட அதிக ஆரோக்கிய நன்மைகள் இருக்கக்கூடிய இந்த இளநீரில் மென்மையான சதைப்பகுதியை இனியும் வீணாக்காமல் கிடைக்கும் பொழுது அதை சாப்பிட்டு அதனுடைய ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள்.

Post a Comment

புதியது பழையவை