இந்திய தண்டனை சட்டம்
Indian Penal Code
அத்தியாயம்-2
Chapter-2
பொது விளக்கங்கள்( General explanation):
Definition in the code to be understood subject to exceptions
குற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவற்றுக்கு உரிய தண்டனைகள் விளக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குரிய விதிவிலக்குகளும் தரப்பட்டுள்ளன. இந்த விதிவிலக்குகள் “பொது விதிவிலக்குகள்” என்ற அத்தியாயத்தின் கீழ் விளக்கப்பட்டுள்ளன.
எனவே சட்டத்தை பயன்படுத்தும்போது விதிவிலக்கு உட்படுத்தி பயன்படுத்தவேண்டும்
ஒவ்வோர் இடத்திலும் விதிவிலக்குகளை குறிப்பிட வில்லையே என்று ஒதுக்கி விடக் கூடாது.
உதாரணம்:
குற்றங்கள் விளக்கி எழுதப்பட்டு இருக்கின்றன. ஆனால் எந்த பிரிவிலும் ஏழு வயதுக்கு குறைவான குழந்தைகள் அந்தக் குற்றங்களை புரிந்தாலும் அதை குற்றமாகக் கொண்டு தண்டனை அளிக்க முடியாது என்பதை குறிப்பிடவில்லை. ஆனால் சட்ட குறிப்புகளை படிக்கும் போது ஏழு வயதுக்கு குறைந்த குழந்தைகள் அந்த குற்றத்தை செய்திருப்பினும் அதனை தண்டனைக்கு உரியதாக கருதக் கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Sense of expression once explained:
ஒவ்வொரு சட்ட விதியும் ஆங்காங்கு விவரிக்கப்பட்டுள்ளது. எத்தகைய பொருள் கொள்ளப்பட வேண்டும் என்று ஓர் இடத்தில் விளக்கப்பட்டு இருக்கிறதோ. அதே பொருளில் இந்த சட்டம் முழுவதிலும் அந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது
'அவன்(ர்)'(Gender) என்று இந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் பதமும் அதன் பல்வேறு உறுப்புகளும் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன.
(Number) பன்மையில் கூறப்பட்டவை ஒருமையிலும் ,ஒருமையில் வருகின்றவற்றை பன்மயிலும் எடுத்துக்கொள்ளலாம். மாறுபாடாக கொள்ள வேண்டிய இடங்களில் சிறப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'ஆண்(Man)' என்ற சொல் ஆண்களில் எல்லா வயதினரையும் பெண் என்ற சொல் பெண்களில் எல்லாம் வயதினரையும் வயது வித்தியாசமின்றி குறிக்கும்
பொதுமக்கள்(public) என்பது எல்லா மக்களையும் சமூகத்தினரையும் குறிக்கும்.
அரசு ஊழியர்( servant of government) என்ற சொல் அரசாங்கத்தில் அல்லது அரசு அதிகாரத்தால் இந்தியாவில் பணிபுரிந்து கொண்டு இருப்பவரையும் நியமிக்கப்பட்டுள்ள வரையும் குறிக்கும்.
அரசு என்பது(Goverment )மத்திய அரசையும் மாநில அரசையும் குறிக்கும்.
இந்தியா(india) என்பது ஜம்மு-காஷ்மீர் நீங்கலாக உள்ள இந்தியா முழுவதையும் குறிக்கும்.
நீதிபதி(Judge) நீதிபதி பதவியில் இருப்போர், உரிமை இயல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளில் ஒரு தெளிவான தீர்ப்பினை உரைக்கும் அதிகாரம் பெற்றவர். இந்த சொல் தனிநபரை குறிக்கலாம். ஒரு குழுவையும் குறிக்கலாம்.
Court of Justice : நீதி பூர்வமாக செயல்படும் அதிகாரம் பெற்ற ஒரு நீதிபதி அல்லது நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழு நீதி பூர்வமாக செயல்படும் போது அதனை நீதிமன்றம் என்று குறிப்பிடுகின்றோம்.
பொது ஊழியர்(Public Servant):
பொது ஊழியர் என்ற சொல் அடியில் கண்டவர்களை குறிக்கும்.
1.முப்படைகளில் உள்ள அலுவலர்கள்.
2.நீதிபதிகள் ஒவ்வொருவரும்.
3.சட்டப் பிரச்சினை அல்லது வேறு விவகாரங்களை பரிசீலித்தல், அறிக்கை கொடுத்தல், ஆவணத்தை வைத்திருத்தல், உண்டாக்குதல் அதிகாரப்பூர்வமாக்குதல், சொத்துக்களை பொறுப்பேற்றல், நீதி பூர்வமான வேலைகளை செய்தல், சத்தியபிரமாணம் செய்வித்தல், மொழிபெயர்த்தல், நீதிமன்றத்தின் ஒழுங்கை நிலைநாட்டல், ஆகியவற்றிற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் அல்லது அத்தகைய கடமைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்படுபவர்.
4.ஜூரி ,அஸர், நீதிமன்றத்துக்கு அல்லது வேறு பொது ஊழியருக்கு துணைபுரியும் பஞ்சாயத்தாரர்
5.Jury(ஜூரி) அரசு நீதிமன்றத்துக்கு அல்லது பொது ஊழியருக்கு உதவி புரியும் பஞ்சாயத்தாரர்
6.நீதிமன்றத்தால் ஒரு விவாகரத்தை பரிசீலிக்க நியமிக்கப்பட்ட நடுவர்.
7.தான் ஏற்றிருக்கும் அலுவல் காரணமாக யாரையேனும் காவலில் வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்கள்.
8.குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றங்களைப் பற்றிய தகவல்களை கொடுப்பதற்கும், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் கொண்டு வருவதற்கும், பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் அரசால் நியமிக்கப்பட்ட அனைவரும் பொது ஊழியர் ஆவார்.
9.சொத்தை எடுக்க, விற்றுக்கொள்ள,வைத்திருக்க, செலவீடு செய்ய கடமைப்பட்ட அலுவலர்.
10.ஒரு கிராமத்தின், நகரத்தின், மாவட்டத்தின் பொது காரியத்துக்காக வரி விதித்தல், அளத்தல், மதிப்பீடு செய்தல் அல்லது ஒரு கிராமத்தின், நகரத்தின் அல்லது மாவட்டத்தின் மக்களுடைய உரிமைகளை நிர்ணயிப்பதற்காக தேவைப்படும் ஆவணங்களை உண்டாக்க அல்லது அதிகாரப்பூர்வமாக வைத்திருக்க கடமைப்பட்டவர் ஒவ்வொருவரும்.
11.தேர்தல் சம்பந்தமான அலுவல் செய்பவரும் பொது ஊழியர் ஆவார்.
12.அரசிடம் பொது ஊழியத்திற்காக சம்பளம் அல்லது சன்மானம் பெறும் ஒவ்வொருவரும் மத்திய-மாநில சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட நிறுவனங்களில் ஊழியத்திற்காக பணிபுரியும் அனைவரும் பொது ஊழியர் ஆவார்.

கருத்துரையிடுக