இந்திய தண்டனை சட்டம் பகுதி -3
(Indian Penal Code )
சென்ற பதிவின் தொடர்ச்சி
பிரிவு-22
அசையும் பொருள்கள்:
பூமியும் பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள பொருள்களையும் அல்லது நிரந்தரமாக பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள பொருள்களுடன் பிணைக்கப்பட்ட பொருள்களையும் தவிர மற்ற எல்லாப் பொருள்களும் ஆசையும் பொருட்கள் என்று சொல்லப்படும்.
பிரிவு-23
சட்டவிரோதமான ஆதாயம், சட்டவிரோதமான இழப்பு.
(Wrongful Gain ,Wrongful Loss)
சட்டவிரோதமான ஆதாயம் என்பது சட்டபூர்வமாக உரிமையில்லாத ஒரு சொத்தை சட்டவிரோதமாக அடையும் ஆதாயமாகும்.
சட்டவிரோதமான இழப்பு என்பது ஒரு சொத்தை சட்டவிரோதமான முறையில் இழந்தால் அதற்கு சட்டவிரோதமான இழப்பு என்று பெயர்.
பிரிவு-24
நேர்மையின்மை
Dishonesty
ஒருவன் மற்றொருவனுக்கு அநியாய லாபம் அடைவதற்கும் அல்லது அநியாய நஷ்டம் ஏற்படுத்துவதற்கும் உள் கருத்துடன் ஒரு காரியம் புரிந்தால் அவன் நேர்மை இன்றி காரியம் புரிவதாக கொள்ளப்படும்.
பிரிவு-25
மோசடி
ஒருவர் மற்றொருவரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு காரியம் செய்யும் போது மோசடி செய்வதாக கொள்ளப்படும்.
பிரிவு 26
நம்பத்தகுந்த காரணம்
Reason to believe
ஒரு விஷயத்தை நம்புவதற்கு ஏற்ற ஒரு காரணம் இருந்தால் அதனை நம்பத் தகுந்த காரணம் என்று சொல்லப்படும்.
பிரிவு-27
மனைவி குமாஸ்தா அல்லது வேலைக்காரனிடம் உள்ள சொத்து
Property in possession of wife, Clerk or Servent
ஒரு சொத்து ஒரு நபரின் மனைவி குமாஸ்தா அல்லது வேலைக்காரனிடம் இருந்தால் அந்த சொத்து அந்த நபரிடம் இருந்ததாகவே இந்தச் சட்டப்படி கருதப்படும்.
பிரிவு 28
போலியாக செய்தல்
Counterfeit
ஒருவன் ஒரு பொருளைப் போலவே மற்றொரு பொருளை போலியாக செய்து அதன் மூலம் பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்லது அதன் மூலம் பிறர் ஏமாற்றப்படுவார் என்று அறிந்திருந்தும் அத்தகைய போலி உற்பத்தியில் ஈடுபடுவதை போலியாக செய்தல் எனப்படும்.
பிரிவு 33
செயல் செய்யாது இருத்தல்
(Act of ommission)
ஒரு செயலை மட்டுமின்றி பல செயல்களையும் இது குறிக்கும். அதேபோன்று செய்யாது விட்டாலும் ஒன்றில்லாமல் பலவற்றையும் குறிக்கும்.பிரிவு 34
கூட்டு நோக்கம்
(Common intention)
ஒரு குற்றச் செயலை கூட்டு நோக்கோடு புரியும் போது ஒவ்வொருவரும் தன்னந்தனியாக அந்த குற்றத்தை புரிந்தவர் ஆகவே கருதப்படும்.
பிரிவு 39
தன்னிச்சைப்படி
(Voluntarily)
ஒரு முடிவை கருத்தில் கொண்டு ஒரு செயல் செய்யப்படுகின்றது. செய்பவனுக்கு அதன் விளைவு என்னவென்று தெரியும் அல்லது என்ன நடக்கும் என்பதைப் பற்றிய தெளிவு அவனுக்கு இருக்கும். அப்படி ஒருவன் தான் நினைத்த விளைவைப் பெற வேண்டுமென்று ஒரு காரியம் ஆக்கும் போது அவனை தன்னிச்சைப்படி காரியம் செய்வதாக கருதப்படும்.
பிரிவு 44
துன்பம்
Injury
சட்டத்திற்கு முரணான ஒருவருடைய உடல் மற்றும் மனம், புகழ் அல்லது சொத்துக்கு இழைக்கப்படும் தீங்கை குறைக்கும்.
பிரிவு 45
உயிர்
life
உயிர் என்பது மனித உயிரையே குறிக்கும் வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியாக தரப்பட்டுள்ளது.
பிரிவு 46
மரணம்
Death
வேறு வகையான விளக்கம் தரப்பட்டால் அன்றி மரணம் என்பது மனிதனுடைய மரணத்தையே குறிக்கும்.
பிரிவு 52
நல்லெண்ணம்
Good faith
அக்கறையுடனும் கருத்துடனும் செய்யக்கூடாத எதையும் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டதாக கொள்ளமுடியாது. அதேபோல அக்கறையுடனும் கருத்துடனும் பரிசீலித்து நம்பிக்கைக்கு உரியதாக கொள்ள தகாதவற்றை நல்லெண்ணத்துடன் செய்ததாகக் கூற முடியாது.

கருத்துரையிடுக