இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்பு
INDIAN PENAL CODE
இந்தியா முழுவதற்கும் பொதுவான ஒரு குற்றவியல் சட்டத் தொகுப்பு மிகவும் அவசியம் என்று கருதி கீழ்கண்டவாறு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் 1860 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை மெக்காலே பிரபுவும் அவரைச் சேர்ந்த 4 சட்ட நிபுணர்களும் உருவாக்கினார்கள். இந்த சட்டத்தில் 23 அத்தியாயங்களும் 511 சட்ட பிரிவுகள் உள்ளன.
1. பெயரும் எல்லையும்( Title and extent of operation of the code):
"இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்பு"என்றே இந்த சட்டம் அழைக்கப்படும். ஜம்மு-காஷ்மீர் பிரிவுகள் நீங்கலாக உள்ள இந்தியா முழுமைக்கும் இந்த சட்டத்துக்கு வரம்பு உண்டு.
2. இந்திய எல்லைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கு தண்டனை( Punishment of offences committed within India):
இந்தியாவில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் இந்த சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளபடி தத்தமது நடவடிக்கைகளுக்கு ஏற்ப தண்டனை பெறுவர். சட்டப்படி செய்ய வேண்டியவற்றை செய்யாது விட்டாலும் குற்றமாகும். அவர்கள் இந்த சட்டப் பிடியின்றி வேறு எந்த விதமாகவும் தண்டிக்கலாகாது
3. வெளிநாடுகளில் செய்யப்பட்ட குற்றங்கள்( Punishment of offence committed beyond but whichby law may be tried within India):
இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்டத்தின் கீழாவது இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற ஒரு குற்றத்திற்காக ஒருவரை குற்றம்சாட்டி விசாரிக்க வேண்டும் என்றால் அவரையும் இந்த சட்டத் தொகுப்பின் படியே தான் விசாரணை நடத்தவேண்டும். குற்றம் இந்தியாவுக்கு வெளியே செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவுக்குள் செய்யப்பட்டிருந்தால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்படியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Extension of code to extra-territorial offences:
(¡)இந்தியாவுக்கு உள்ளும் புறமும் உள்ள இந்திய குடிமக்கள் செய்யும் குற்றங்களும்.
(¡¡)இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் அல்லது விமானத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கும் இந்த சட்டத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளவை பொருத்தமாக இருக்கும்.
விளக்கம்:
இந்தியாவில் தண்டனை பெறத்தக்க குற்றத்தை இந்தியாவுக்கு வெளியே செய்தாலும் குற்றமாகும்.
உதாரணம்:
இந்திய குடிமகனாக கோபால் உகந்த நாட்டில் ஒரு கொலை செய்கிறான் இந்தியாவில் எங்கே இருந்தாலும் அங்கே அந்த கொலை குற்றத்துக்காக அவனை விசாரித்து தண்டிக்கலாம்.
5.Certain laws not to be affected by this Act:
இந்திய அரசின் கீழ் பணிபுரியும் தரை, கப்பல், விமானப் படைகளை சார்ந்த வீரர்களையும், அதிகாரிகளையும் கலகம்(Mutiny) செய்வதற்காகவும், படையினை துறந்து ஓடி விடுவதற்காகவும் தண்டிப்பதற்கு என உருவாக்கப்பட்டுள்ள எந்த சட்டத்தையும் இந்த சட்டத் தொகுப்பு பாதிக்காது.
அதே போன்று இயற்றப்பட்டுள்ள விசேஷ சட்டங்களை எதனையும், பிராந்திய சட்டங்கள் எதனையும் இந்த சட்டத் தொகுப்பில் உள்ளவை பாதிக்காது.

கருத்துரையிடுக